Tue. Sep 8th, 2026

தேசிய மட்ட குத்துச்சண்டை வட இந்து மகளிர் கல்லூரிக்கு இரண்டு வெண்கலங்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரிக்கு இரண்டு வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டி கொழும்பு றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர்.நர்மதா 20 வயதிற்கு உட்பட்ட 48 – 51 கிலோ எடைப் பிரிவில் பங்கு பற்றி வெண்கல பதக்கத்தையும், ஜெ.நிதுஷா 20 வயதிற்கு உட்பட்ட 45 – 48 கிலோ எடைப் பிரிவில் பங்கு பற்றி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed