தேசிய மட்ட குத்துச்சண்டை வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவனுக்கு வெண்கல பதக்கம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முல்/வற்றாப்பளை மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.யதுர்ஷன் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டி கொழும்பு றேயல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான 60 தொடக்கம் 64 கிலோ எடை பிரிவில் முல்லைத்தீவு கல்வி வலய வற்றாப்பளை மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.யதுர்ஷன் வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றி பாடசாலையின் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.