தேசிய மட்ட குண்டு போடுதல் மிதுன்ராஜ் வெள்ளி பதக்கம்
தேசிய மட்ட குண்டு போடுதல் போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.
102வது அகில இலங்கை தேசிய மட்ட ஆண்கள் பெண்களுக்கான தடகள போட்டிகள் தியகம மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்த யாழ் மாவட்ட வீரர் எஸ்.மிதுன்ராஜ் 14.94 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.