தேசிய மட்ட கபடி ஹாட்லிக்கு வெண்கல பதக்கம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றினர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப் போட்டிகள் நேற்று திங்கட்கிழமை கேகாலை பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் 20 வயதுப் பிரிவினருக்கான ஆண்களுக்கான கபடிப் போட்டியில் 3ம் இடத்திற்கான போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியை எதிர்த்து மட்டக்களப்பு அல்லஸ்ஸார் வித்தியாலய அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி 46:33 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.