தேசிய மட்ட கபடி வடமாகாண பெண்கள் அணி வெண்கலம்
43வது இலங்கையின் தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கபடிப் போட்டியில் வடமாகாண அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர்
தேசிய மட்ட கபடிப் போட்டி இன்று பொலநறுவை மைதானத்தில் நடைபெற்றது.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வடமாகாண அணியை எதிர்த்து சப்பிரகமுவ மாகாண அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய வடமாகாண அணி 52:24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளனர்.