தேசிய மட்ட கபடியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி பலத்த போராட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டியில் பலத்த போராட்டத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கபடி போட்டி இன்று அம்பாறை நிந்தவூர் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து அம்பாறை நிந்தவூர் அஷ்ரக்தேசிய பாடசாலை அணி மோதியது.

இதில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி பலத்த போராட்டத்தில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.