தேசிய மட்ட கபடிப் போட்டி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

இலங்கை பாடசாலைகள் கபடிச் சம்மேளனம் நடாத்திய தேசிய மட்ட கபடிப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியினர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளனர்.
இலங்கை பாடசாலைகள் கபடிச் சம்மேளனத்தினால் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட கபடிப் போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை கேகாலையில் நடைபெற்றது .
இதில் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான
இதன் இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியை எதிர்த்து கேகாலை றிவிசாந் வித்தியாலய அணி மோதியது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக விளையாடிய போதிலும் சில புள்ளிகளால் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.