தேசிய மட்ட கனிஷ்ட பிரிவினருக்கான தட்டெறிதல் ஹாட்லிக் கல்லூரி மாணவன் லக்சயன் வெண்கலம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கனிஷ்ட பிரிவினருக்கான மெய்வல்லுநர் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த கே.லக்சயன் வெண்கல பதக்கத்தை தமதாக்கிக் கொண்டார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த கே.லக்சயன் 40.26 மீற்றர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.