தேசிய மட்ட கணித போட்டி வடமாகாணத்திற்கு மூன்றாமிடம்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கணித போட்டித் தொடரில் வடமாகாண மாணவர்கள் அணி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கணித போட்டித் தொடர் இன்று மீப்பேயிலுள்ள கல்வி தலைமைத்துவ அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
இதில் சிரேஷ்ட பிரிவிற்கான கணித போட்டித் தொடரில் வடமாகாண அணியினர் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டனர். வடமாகாண
அணியில் வடமராட்சி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி தெற்கு, வவுனியா தெற்கு கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்கள் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர். இப்போட்டியில்
முதலிடத்தை மத்திய மாகாணமும், இரண்டாமிடத்தை சப்ரகமுவ மாகாணமும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.