தேசிய மட்ட கணித புதிர் போட்டி சொற்பப் புள்ளிகளால் வடமாகாண சிரேஸ்ட பிரிவு 1 இரண்டாமிடம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கணித புதிர் போட்டியில் வடமாகாண சிரேஸ்ட பிரிவு 1 அணி 1.83 சொற்பப் புள்ளிகளால் இரண்டாமிடத்தை பெற்றுள்ளனர் .
இதில் கிழக்கு மாகாணம் 326 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தையும், வடமாகாணம் 324.17 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், மேல் மாகாணம் 305.17 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கணித புதிர் போட்டி நேற்று வெள்ளிகிழமை கொழும்பு மீபேயில் நடைபெற்றது .
இதில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி பி.ஹரிணி, ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜி.கிரிஷிகன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் எல்.அகர்ஷன், பி.நேசிகன், சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவிகள் எஸ்.வனோஜா, ஜெ.வைஷ்ணவி, வேம்படி மகளிர் உயர் தரப் பாடசாலை மாணவிகள் கே.தாரங்கா, ஆர்.கோஷிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.