தேசிய மட்ட கணித புதிர் போட்டியில் சாதித்தது வடக்கு மாகாணம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்ட கணித புதிர் போட்டியில் வடமாகாணம் கனிஸ்ட பிரிவில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
இரண்டாமிடத்தை இடத்தை கிழக்கு மாகாணமும் மூன்றாம் இடத்தை மேல் மாகாணமும் பெற்றனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்ட கணித புதிர் போட்டி இன்று வியாழக்கிழமை கொழும்பு மிபேயிலில் நடைபெற்றது.
கனிஸ்ட பிரிவினருக்கான போட்டியில் வடமாகாணத்தைச் சேர்ந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஜி.சாகித்தன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம். ஜதுர்சன், மற்றும் ஜெ.லிவிந் ஆகியோரும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வி.தணிகைக்குமரன், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பி.சர்றினி, அருணோதயக் கல்லூரிச் சேர்ந்த எம். அபிசயன், யாழ் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எஸ். அபிசைசன், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த கபிநயன், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரி.திருக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.