தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் வடமாகாணம் முதலிடம்
அகில இலங்கை தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வடமாகாணத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அகில இலங்கை பாடசாலைகள் பங்கு பற்றிய தேசிய கணித ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 5ம் திகதி கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்த மாணவர்கள் 52 நிலைகளைக் கைப்பற்றி முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
குறித்த போட்டியின் முடிவுகள் நேற்று வியாழக்கிழமை வெளியாகியுள்ளன.
குறித்த போட்டியில் பிரிவு 1இல் 2 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்கள் உட்பட 18 திறமைச் சான்றிதழ்களையும், பிரிவு 2இல் ஒருதங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம், உட்பட 5 திறமைச் சான்றிதழ்களையும், பிரிவு 3இல் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 6 திறமைச் சான்றிதழ்களையும் பெற்று மொத்தமாக 52 நிலைகளை கைப்பற்றி முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.