தேசிய மட்ட உயரம் பாய்தலில் கொக்குத்தொடுவாய் மாணவி சப்திகா தங்கம் வென்று சாதனை

கல்வி அமைச்சும் பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய சேர் ஜோன் காபற் தடகளப் போட்டியில் கொக்குத்தொடுவாய் மாணவி க. சப்திகா தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
கல்வி அமைச்சும் பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய சேர் ஜோன் காபற் தடகளப் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிலே நடைபெற்று வருகின்றது.


இதில் 12 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் உயரம் பாய்தலில் வடமாகாணத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்தின் கொக்குத்தொடுவாய் மாணவி
க.சப்திகா 1.32 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.