தேசிய மட்ட ஆண்கள் வலைப்பந்தில் மகுடம் சூடியது யாழ் மாவட்ட செயலக அணி
அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மட்ட ஆண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட செயலக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மட்ட வலைப்பந்தாட்ட போட்டிகள் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட செயலக அணியை எதிர்த்து வடமாகாண கல்வித் திணைக்கள அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் யாழ் மாவட்ட செயலக அணி வீரர்களின் பந்துப் பரிமாற்றத்தை சிறப்பாக
வடமாகாண கல்வித் திணைக்கள அணி கட்டுப்படுத்தி ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முதல் பாதியாட்டத்தில் வடமாகாண கல்வித் திணைக்கள அணி 9:5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டத்தில் யாழ் மாவட்ட செயலக அணி தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டம் முடிவடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் ஆட்டத்தை சமநிலைப்படுத்தினர். இதனால் இறுதி நிமிடங்கள் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் யாழ் மாவட்ட செயலக அணி 12:11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.