தேசிய பாவோதலில் மன்/சித்திவிநாயகர் இ.கல்லூரி மாணவி சாதிப்பு
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்மொழித் தின பாவோதல் போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மாணவி பாஸ்கரன் வினுக் ஷி முதலிடத்தைப் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்மொழி தின போட்டிகள் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தரம் 8,9 மாணவர்களுக்கான பிரிவு 3ற்கான போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மாணவி பாஸ்கரன் வினுக் ஷி முதலிடத்தைப் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.