Mon. May 18th, 2026

தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பான பயிற்சிப்பட்டறை!

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் சார்ந்து கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பான பயிற்சி இன்றைய தினம்(17) காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளர் திருமதி .லி.கேகிதா தலைமையில் நடைபெற்றது.

குறித்த பயிற்சியானது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இவ் பயிற்சிப்பட்டறையில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உள பிரச்சினைகள், சுகாதாரம், போசனை, கல்வி, தற்கொலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் போன்றவை பற்றி கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

குறித்த பயிற்சிப்பட்டறையில் மாவட்ட உதவி செயலாளர். திருமதி லி.கேகிதா, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினது வளவாளர்கள், சிறுவர் மற்றும் பெண்கள் சார்ந்து கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed