Wed. Sep 18th, 2024

தேசிய கால்பந்தாட்ட அணியில் மகாஜனக் கல்லூரி மாணவிகள் நால்வர் உதவி பயிற்றுநராக சாந்தன்

17 வயதுப் பெண்களுக்கான தேசிய அணியில் தெல்லிப்பளை
மகாஜன வீராங்கனைகள் நால்வர் இடம்பிடித்ததுடன் உதவி பயிற்றுநராக தெல்லிப்பளை உதைபந்தாட்ட அணியின் பயிறுநர் சாந்தகுமார் நியமனம் பெற்றுள்ளார்.
இந்திய உதைபந்தாட்ட சம்மேளனமும் இந்திய விமானப்படையும் இணைந்து நடாத்தும் SABROTO International Football Tournament-2024  இல் பங்குபற்றும் இலங்கை 17 வயதுப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரியின் 4 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.
இப்போட்டி 05,08.2024 இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.இந்த அணியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் வீராங்கனைகளான
யசோதரன் கல்சிகா
கேதீஸ்வரன் றேனுஜா
யோகானந்தராசா உமாசங்கவி
சயந்தன் கியுஸ்ரிகா
ஆகிய வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த தேசிய அணியின் உதவிப் பயிற்றுநராக  தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியை தேசிய மட்டத்தில் சாதிக்க வைத்த உதைபந்தாட்டப் பயிற்றுநர் சிவமகாராசா சாந்தகுமார் (சாந்தன்) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்