தேசிய கரப்பந்தாட்ட நடுவர்களுக்கான பி தர பரீட்சையில் முதன் முறையாக வடமாகாணத்தில் பெண் நடுவர் சித்தி
தேசிய கரப்பந்தாட்ட நடுவர்களுக்கான தரம் பி பரீட்சையில் வடமாகாணத்தில் முதன் முறையாக பெண் ஒருவர் சித்தியடைந்துள்ளார்.
பருத்தித்துறை சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் பயிற்றுவிப்பாளராக பணிபுரியும் அ.நிதர்சினி என்பவரே இப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
இவர்களுக்கான தேர்வு பரீட்சையில் கடந்த 2ம் திகதி நடைபெற்று சித்தியடைந்தவர்களுகான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 27ம் திகதி கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.