Sun. Nov 10th, 2024

தேசிய உதைபந்து மீண்டும் சாதிக்கும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி, அதிபருக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் குவியும் பாராட்டுக்கள்

தேசியமட்ட உதைபந்தாட்டத்தில்
12 வயதுப் பெண்கள் பிரிவில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து சில நாட்களில் ஓய்வு பெற இருக்கும் அதிபருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் 12 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டி  கொழும்பு குதிரைப் பந்தைய விளையாட்டுத் திடலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து  குருணாகல் மலியதேவ பெண்கள் கல்லூரி அணி மோதியது.
முதலாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி வீராங்கனை யாழினி ஒரு கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்திலும் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர். இருப்பினும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி வீராங்கனை கேதாரணி தனது அணிக்கான சிறப்பான கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
பெண்கள் உதைபந்தாட்டத்தில் தேசிய ரீதியில் சாதித்து வரும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி பயிற்றுவிப்பாளர் சாந்தன் அவர்களையும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு பல்வகையிலும் உதவி புரிந்து எதிர்வரும் கிழமை ஓய்வு பெற இருக்கும் அதிபர் ம. மணிசேகரன் அவர்களுக்கும் கல்லூரி சமூகம் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்