தேசிய ஆரம்பிப்பாளர் கருணாகரன் அவர்களின் நெகிழ்வான செயலுக்கு பலரும் பாராட்டு

தேசிய ஆரம்பிப்பாளர்களில் ஒருவரான யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாகரன் அவர்களின் நெகிழ்வான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உயர் தொழில்நுட்ப கல்லூரியின் தடகள போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பங்கு பற்றிய வீராங்கனை ஒருவரின் 5 லட்சம் பெறுமதியான நகை தவறவிடப்பட்டது. அதனை குறித்த ஆரம்பிப்பாளரினால் கண்டெடுக்கப்பட்டு குறித்த வீராங்கனையிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த ஆரம்பிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், நான் வங்கிகளில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய போது பலர் தமது உடமைகளை தவறவிடுகின்ற போது உரிய முறையில் அவர்களிடம் சமர்ப்பித்திருக்கிறேன். இது எனக்கு விளையாட்டின் ஊடக கிடைத்த ஒரு பண்பு எனக் கருதுகிறேன். விளையாட்டு வீரர்கள் தாம் வெற்றி பெறுவதற்காக சட்டத்திற்கு முரணாக செயற்படக்கூடாது. யாருடைய வெற்றிகளையும் தவறாக தட்டிப் பறிக்கக் கூடாது. இதிலிருந்து தான் ஏனையோருடைய பொருள்களிலும் ஆசைப்படக் கூடாது. பொருளை தொலைத்தவர்களின் மனவேதனையை அறிந்து அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.