Wed. Mar 11th, 2026

தேசிய அரை மரதன் சு.கீரன் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை

நீண்ட தூர ஓட்டங்களில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய ரீதியில் சாதித்து தேசியத்தில் சாதனை படைத்து வருகின்றனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட அரைமரதன் போட்டியில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவன் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய அரைமரதன் போட்டி காலியில் நேற்று முன்தினம் 11.11.2023 நடைபெற்றது
கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சு.கீரன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன் முழங்காவில் மகா வித்தியாலயத்தின் மற்றொரு மாணவன் K.மகீசன் 13ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். கடந்த வருடமும் கீரன் வெள்ளிப்பதக்கத்தை வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடப்பட்டது.
முழங்காவில் மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை மாகாண ,தேசிய மட்டப்போட்டிகளில் சாதித்து வருவது பெருமைக்குரிய விடயமாகும்
இவர்களுக்கான  பயிற்சியை உடற்கல்வி ஆசிரியர் றொஸ்கோ அவர்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed