கல்வி அமைச்சும் ரவர் மண்டப திரையரங்கமும் இணைந்து நடாத்திய இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய ரீதியான நாடகப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி இரண்டாமிடம் இடத்தை பெற்றது.
” முப்பது நிமிடத்தில் உயிர் மூச்சு ” எனும் தலைப்பில் உருவாகிய நாடகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றது.
இதில் சிறந்த துணை நடிகராக மாணவன் கனுசாந், சிறந்த ஒப்பனையாளராக ஆசிரியர் விஜயகுலசிங்கம், சிறந்த நெறியாளராக ஆசிரியர் அயூரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.