தேசியத்தில் வெள்ளிப் பதக்கத்துடன் மிளிரும் மகாஜன கல்லூரி
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டியில் கோலூன்றி பாய்தலில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியைப் பிரதிநிதித்தும் செய்த ச.துசாந்தன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இதில் 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ச.துசாந்தன் 4.00 மீற்றர் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் வர்ணச் சான்றிதழையும் பெற்றுள்ளார்.