தேசியத்தில் வடக்கிற்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பதிவு செய்த அருணோதய கல்லூரி மாணவி
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டியில் வடமாகாணத்திற்கான முதலாவது தங்கப் பதக்கத்தை அருணோதயக் கல்லூரி மாணவி செ.நிருசியா பெற்றுக் கொடுத்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தலில் அளவெட்டி அருணோதய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த செ.நிருசியா 3.15 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும்,
அதே கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சி.டிலக்சிகா 2.70 மீற்றர் பாய்ந்து நான்காம் இடத்தையும் பெற்றுள்ளனர்.