தேசியத்தில் பளை மத்திய கல்லூரி மாணவன் எழில்பிரியன் வரலாற்றுச் சாதனை
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கிளி/மத்திய கல்லூரி மாணவன் வெண்கல பதக்கத்தை பெற்று கல்லூரியின் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் 16 வயது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கிளி/பளை மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த ர.எழில்பிரியன் 56.91 மீற்றர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றி பளை மத்திய கல்லூரி வரலாற்றில் எறிதல் நிகழ்சியில் தேசிய மட்டத்தில் பதக்கம் வென்றது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.