Thu. Jan 23rd, 2025

தேசியத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி வெள்ளிப் பதக்கம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடரில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி தமது கல்லூரிக்கு முதலவது பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடரில் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ப.அபிசாளினி 2.90 மீற்றர் உயரம் பாய்ந்து வர்ணசான்றிதழுடன்
வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்