தேசியத்தில் கிளிநொச்சி மாணவன் சாதிப்பு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தடகள தொடரில் உயரம் பாய்தல் போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் எஸ்.அபிமன்சு வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.அபிமன்சு 2.03 மீற்ரர் பாய்ந்து வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.