தேசியத்தில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவன் கீரன் சாதிப்பு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 1500 மீற்ரர் போட்டியில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவன் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் இன்று நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்ரர் போட்டியில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சு.கீரன் 1500 மீற்ரர் ஓட்டத்தில் 4 நிமிடம் 06 செக்கன் 87 மில்லி செக்கன்களில் ஓடி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இவருக்கான பயிற்சியை உடற்கல்வி ஆசிரியர் றொஸ்கோ அவர்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.