தெல்லிப்பழை யா/மகாஜனக் கல்லூரியின் செயற்பட்டு மகிழ்வோம் மற்றும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி
தெல்லிப்பழை யா/மகாஜனக் கல்லூரியின் செயற்பட்டு மகிழ்வோம் மற்றும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.

கல்லூரி முதல்வர் இ.புஸ்பரட்ணம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை, மருத்துவ பீட பேராசிரியர் கலாமதி முருகானந்தன், சிறப்பு விருந்தினர்களாக யா/புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலய அதிபர் பொன்னம்பலம் கேதீஸ்வரன்
யா/மகாஜனக் கல்லூரி ஓய்வு நிலை உப அதிபர் திருமதி.மோகனவதனி ரவீந்திரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

மறுநாள் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்கு முதன்மை விருந்தினராக வடமாகாணம் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி. நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் பிரதம கணக்காளர்
மகாலிங்கம் சிவகுமார், சிறப்பு விருந்தினர்களாக அ.விமலதாசன், திருமதி.சந்திராதேவி விமலதாசன்
கௌரவ விருந்தினர்களாக வசி கட்டுமான கட்டட ஒப்பந்தக்காரர்
கனகரத்தினம் வசீகரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.