தெல்லிப்பழை பிரதேச நீளம் பாய்தலில் விநாயகர் கழக தனோஜன் தங்கம் வென்றார்

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டியில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் விநாயகர் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ஏ.தனோஜன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டிகள் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் விநாயகர் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ஏ.தனோஜன் தங்கப் பதக்கத்தையும், விநாயகர் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ஐ.அபிநயன் வெள்ளிப் பதக்கத்தையும் கணேசன் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ஜி.லக்சிகன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்