தெல்லிப்பழை இந்து இளைஞரின் வைர விழா நிகழ்வு நாளை
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தின் 60 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வைரவிழா நாளை சனிக்கிழமை மல்லாகம் பழம்பதி தேவஸ்தானத்திலிருந்து கலை கலாசார பண்பாட்டு அம்சங்களுடன் கூடிய நடைபவனியுடன் மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகி நிகழ்வுகள் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ளது.
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத் தலைவர் பொ.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்விற்கு ஆசியுரையினை மாவை ஆதீன முதல்வர் மகாராஜாஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான பிரதம குரு பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சாரியார் மற்றும் மருதனார்மடம் ஸ்ரீ அருள்வளர் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ இ.சுந்தரரேஸ்வரக் குருக்கள் ஆகியோர் வழங்கவுள்ளதுடன்,
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தர்மகர்த்தா சபைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தர்மகர்த்தா சபை செயலாளர் வைத்திய கலாநிதி தி.திவாகரன் ஆகியோரும்,
கௌரவ விருந்தினர்களாக நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், தெல்லிப்பழை பிரதேச செயளாளர் சிவகெங்கா சுதீஸ்ணர் மற்றும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான குரு சிவப்பிரம்மஸ்ரீ இ.பிரசன்னவதனக் குருக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
60 வது ஆண்டு நிறைவாக “வைரச்சங்கமம்” எனும் நூல் வெளியீடு செய்யப்படவுள்ளதுடன் வீணைக்கச்சேரி, கோவலன் கண்ணகி நாடகம் மற்றும் தெய்வீக இசைச்சங்கமம் ஆகியன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.