தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி பளுதூக்கலில் வெள்ளிப் பதக்கம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஸ்ரீவித்தகி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலநறுவையில் நடைபெற்று வருகிறது.
இதில் 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஸ்ரீவித்தகி ரவிச்சந்திரன் 71 கிலோ எடைப் பிரிவில் பங்கு பற்றி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.