தெல்லிப்பளை சைவப் பிரகாச வித்தியாசாலையின் நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் மற்றும் 125வது ஆண்டு மலர் வெளியீடும்
தெல்லிப்பளை சைவப் பிரகாச வித்தியாசாலையின் நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் மற்றும் 125வது ஆண்டு மலர் வெளியீடும் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 8 மணிக்கு பாடசாலையின் சுந்தரமூர்த்தி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலை முதல்வர் திருமதி.இன்பமதி பாலசுந்தரம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வலிகாமம் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ஜமுனா ராஜசீலன், சிறப்பு விருந்தினராக சாந்தா அறக்கட்டளை தலைவர் அ.உதயகுமார், கெளரவ விருந்தினர்களாக தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பிரம்மஸ்ரீ. பிரன்னவதன சர்மா, சைவப் பிரகாச வித்தியாசாலையின் பழைய மாணவரும், வழித்தோன்றல் ஸ்தாபகருமான திருமதி. மதுரா பாலச்சந்திரன் ஆகியோரும், நினைவு பேருரையை தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய தலைவர் செஞ்சொற்செல்வர். ஆறு. திருமுருகன், ஆசியுரையை தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ. சுந்தரசெந்தில்ராஜ சிவாச்சாரியார், நூல் ஆய்வினை கலாவித்தகர். திருமதி.கோகிலா மகேந்திரன் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.