தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் சற்று முன்னர் கைது

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் ஹைதராபாத் பொலீஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புஸ்பா 2 திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் குறித்த திரைப்படத்தை பார்க்கச் சென்ற 32 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பிற்கு அல்லு அர்ஜூன் அவர்களே காரணம் எனப் புகார் செய்யப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.