Sat. Feb 15th, 2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் விபத்து ஒருவர் உயிரிழந்துள்ளார்

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; சாரதி பலி
– காயமடைந்த சுற்றுலா பயணிகள் லைத்தியசாலையில் அனுமதி.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (17) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் சுற்றுலா பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ்விபத்தில் 29 வயதான தொடங்கொட பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் 12 பேர் பெலியத்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுல் 7 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த சாரதியின் உடல் பெலியத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்