Fri. Feb 7th, 2025

தேயிலை கொழுந்து பறித்தவர்களை கொட்டித்தீர்த்த குளவி!! -10 பெண்கள் உட்பட 11 பேர் வைத்திய சாலையில்-

ஹட்டன் – டிக்கோயா என்பில்ட் நோனா தோட்டத்தில் உள்ள 5ம் இலக்க தேயிலை மலையில் இன்று புதன்கிழமை கொழுந்து பறித்து கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண் தொழிலாளர்கள் புற்களுக்கு கிருமிநாசினி விசிறியவேளை மரத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதில் 10 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளருமாக மொத்தம் 11 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்