தெமட்டகொட பகுதியில் காஸ் சிலிண்டர் லீக்கால் வெடிப்பு சம்பவம், இருவர் காயம்

இன்று (15) காலை தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக போலீஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இன்று காலை 8.45 மணியளவில் தெமட்டகொட சமந்தாவட்டையில் உள்ள மஹாவிலா லேன் பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த வெடிப்பின் காரணமாக 2 பெண்கள் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காஸ் சிலிண்டர் லீக்கால் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள் . சம்பவம் தொடர்பாக தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.