தென்கொரியாவில் நடைபெறவுள்ள பெண்களுக்கான கபடிப் போட்டியில் தமிழ் வீராங்கனைகள் இருவர்

தென்கொரியாவில் நடைபெறவுள்ள பெண்களுக்கான கபடிப் போட்டியில் தமிழ் வீராங்கனைகள் இருவர் கலந்து கொள்ளவுள்னர்.
தென்கொரியாவில் அழைக்கப்பட்ட நாடுகளுக்கு இடையிலான பெண்களிற்கான கபடிப் போட்டி எதிர்வரும் 28ம் திகதி முதல் 1ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை தேசிய அணியில் யாழ் மாவட்ட கபடிச் சங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த வி.டிலக்சனா, இ.பிரியவர்னா ஆகியோர் கலந்து கொள்ளவுள்னர்.
வி.டிலக்சனா இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம், இ.பிரியவர்னா நெல்லியடி மத்திய கல்லூரி சார்பாக பாடசாலை காலத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.