தெகிவளையில் இடம்பெற்ற புகையிரதம்-லொரி விபத்தில் 7 பேர் காயம்
கொழும்பில் இருந்து காலிக்கு சென்ற புகையிரதம் ஓன்று லொரி ஒன்றுடன் மோதியதில், புகையிரத்தில் பயணம் செய் செய்த 7 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இன்று (29) மாலை இடம்பற்றது. தெகிவளைக்கும் வெள்ளவத்தைக்கும் இடைபட்ட பகுதியில் சென் பீட்டர்ஸ் லேனில் இந்த சம்பவம் இடம்பெற்றது . தவறுதலாக லொரி பின்பக்கமாக புகையிரத தண்டவாளத்துக்கு மிக மிக சமீபமாக சென்றதால் , புகையிரத்துடன் மோதியதில் , புகையிரதத்தில் தொங்கிச்சென்ற பயணிகளே அதிகம் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தெகிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்