துப்பாக்கி திருடிய இராணுவ சிப்பாய்கள், 5 போ் கைது.
பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கியை திருடிய இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 5 பேரை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
மேற்படி தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிகளுடன் இராணுவத்தின் பாணந்துறை முகாமை சேர்ந்த
இரண்டு இராணுவத்தினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் திகதி, மோட்டார்சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் மீது
நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் சம்பந்தமாக நடத்தி வரும் விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு அமைய
துப்பாக்கிகளுடன் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈஸ்டர் தாக்குதலின் பின் கடமைக்கு சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர், இந்த துப்பாக்கிகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.