Wed. Mar 11th, 2026

துன்னாலை பகுதியில் காஸ் சிலிண்டர்கள் தொடர் திருட்டு – கண்டுகொள்ளாமல் இருக்கும் பொலீஸார்

துன்னாலை பகுதியில் எரிபொருள் வாயு சிலிண்டர் தொடர்ந்து களவாடப்பட்டு வருவதாகவும்,  பல தடவைகள் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் திருட்டுச் சம்பவத்தை குறைக்க முடியவில்லை என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வடமராடாசி துன்னாலை வல்லியானந்தா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை விஷ்ணு அரைக்கும் ஆலையில் பகல் வேளையில் எரிபொருள் வாயு சிலிண்டர் களவாடப்பட்டுள்ளது.
குறித்த ஆலை வெள்ளிக்கிழமையில் நேரம் தாழ்த்தி மதிய நேரத்திற்கு பின்னரே திறப்பது வழமையாக கொண்டிருந்தவேளை இன்றும் மதியம் 12 மணியளவில் ஆலை உரிமையாளர் திறப்பதற்காக வருகை தந்த போது வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்ட சிலிண்டர் களவாடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பல வீடுகளில் சிலிண்டர் உட்பட பல பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் பொலீஸார் திருடனை கண்டுபிடிக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை மக்களால் அடையாளம் காட்டப்பட்ட போதிலும், இன்னமும் திருடனை கண்டுபிக்காத நிலையில் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed