Tue. Jun 9th, 2026

தீபாவளி தினத்தன்று மோதும் விஜய்யும் விஜய்சேதுபதியும் மோத இருக்கிறார்கள்…

டைட்டில் ஐ பார்த்திட்டு நிய சண்டை என்று நினைத்திடாதீங்க ..அவங்க இரண்டு பேரோட படங்களும் தான் திரையரங்கில மோதப்போகுது..

விஜய்யும், விஜய் சேதுபதியும் தீபாவளி தினத்தில் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்து மோத இருக்கிறார்கள்..

தெறி மற்றும் மெர்சல் படங்களைத் அடுத்து விஜய்யும் அட்லீயும் மீண்டும் இணைந்த கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தணியின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார்.

இதில் நயன்தாரா,யோகி பாபு, விவேக், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராப் மற்றும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கின்றது . இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்படுள்ளது .

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சங்கத் தமிழன்’ திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது . இந்த படத்தை விஜய் சந்தர் இயக்குக்கின்றார்

இந்த படத்தில் படத்தில் விஜய் சேதுபதியுடன் நிவேதா பெத்துராஜ், சூரி, மொட்டை ராஜேந்திரன், நாசர், ராஷி கண்ணா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இரண்டுபேரின் படமும் ஒன்றாக வருவது இவர்களின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் திண்டாட்டம் தான்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed