Thu. May 21st, 2026

தீக்குளிப்பில் தவறி வீழ்ந்தது ஒருவர் காயம்

பொலிகண்டி வீரபத்திரர் ஆலயத்தில் தீக்குளிப்பில் தவறி விழுந்து ஒருவர் தீக்காயத்திற்கு உள்ளாகிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை  இரவு நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில் சின்னப்பு உதயச்சந்திரன் என்பவரே தீக்காயத்திற்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று குறித்த ஆலயத்தின் சங்காபிஷேக நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆனந்த காவடியைத் தொடர்ந்து பக்தர்களால் தீக்குளிப்பு நேர்த்திக் கடன்கள் இடம்பெற்றது. இதிலேயே குறித்த நபர் தவறி விழுந்த நிலையில் தீக்காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed