Fri. Jan 17th, 2025

திருமண வீடு மரண வீடான சோகம்!!

மகளின் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்த தந்தை அதிகாலை வேளையில் திடீரென சாவடைந்து திருமண வீடு மரண வீடாக மாறிய சோகமான சம்பவமொன்று மாகடுவாவ பகுதியில் பதிவாகியுள்ளது.

61 வயதாக குறித்த தந்தை தமது இளைய மகளின் திருமணம் நேற்று திங்கட்கிழமை தமது இல்லத்தில் இடம்பெறவிருந்த நிலையில், உறவினர்களின் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை அலங்கரிக்கும் பணிகளில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அன்றிரவு 10 மணியளவில் அனைவரும் தேநீர் அருந்தியுள்ளனர். பின் குறித்த நபருக்கு லேசாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மஹவ வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அவரது நிலை மோசமானதை தொடர்ந்து, அங்கிருந்து இரத்தினபுரி-நிகவெரடிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

நேற்று முற்பகல் நிகவெரடிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. பரிசோதனை அறிக்கையில் அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி எஸ்.யு. ரத்னாயக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தினால் திருமண வீடு இன்று மரண வீடாக மாறியுள்ளதோடு, மாகடுவாவ பிரதேசமே இன்று சோகத்தில் மூழ்கியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்