திருநீறு சிந்துகிறதாம் சாயிபாபா படத்திலிருந்து.
வவுனியா- உங்கிளாங்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் சாயிபாபா படத்திலிருந்து கடந்த சில நாட்களாக திருநீறு கொட்டுவதாக கூறப்படுகின்றது.
உக்கிளாங்குளம் குட்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி பாபாவின் படத்திலிருந்தே சனிக்கிழமை முதல் திருநீறு
கொட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வீட்டிற்கு இன்று காலையில் ஊடகவியலாளர்கள் சென்றபோது அங்கிருந்த சீரடி பாபாவின்
பல புகைப்படங்களில் திருநீறு வீசப்பட்டது போன்று காட்சியளித்ததுடன் படத்தின் கீழும் திருநீறு காணப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,
தாம் 10 வருடங்களாகப் பாபாவை வணங்கி வருவதாகவும் புலம் பெயர் தேசத்தில் இருக்கும் தமது மகளின் வீட்டிலும் இவ்வாறு அதிசயம் இடம்பெற்ற நிலையில் தற்போது
அவரது வவுனியா வீட்டிலும் இவ்வாறு அதிசயம் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.