திருட வந்த நபர் மாடியில் இருந்து குதித்ததில் உயிரிழப்பு

நேற்றிரவு மட்டக்குளிய, கதிரானவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் திருடவந்த நபர் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் திருடுவதற்காக வந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த நபர் வீட்டிற்குள் வருவதை அவதானித்த பெண் ஒருவர் கூச்சலிட்டவுடன், அவர் வீட்டின் 3ஆவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
இதனால் பலத்த காயதுக்குள்ளான நபரை அயலவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்
கைது செய்யப்பட்ட குறித்தநபர் இன்று காலை 8.30 இற்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது
சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.