Thu. May 21st, 2026

திருகோணமலை அபயபுராவில் புத்தர் சிலைகள் உடைப்பு

திரு­கோ­ண­மலை உப்­பு­வெளி பொலிஸ் பிரிவில் உள்ள அப­ய­புர பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் (24) இரவு ஸ்ரீ அப­ய­ராமய விகா­ரையில் இரு புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக உப்­பு­வெளி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
விகா­ரை­யி­லுள்ள இரண்டு சிலை­களே இனந்­தெ­ரி­யாத நபர்களால் சிலை­களின் தலைப்­ப­கு­திகள் சிதைக்­கப்­பட்­டதுடன் சிலைகளும் கீழே தள்ளி விழுத்தப்படுள்ளன

விகா­ரையின் விகா­ரா­தி­பதி நேற்று முன்­தினம் இரவு ள பிரித் ஓதும் நிகழ்ச்­சிக்கு வெளியே சென்­றி­ருந்த நேரம் பார்த்து ­இந்த சம்பவத்தை நன்கு திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர்

இந்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தினர்.
இந்த சம்பவத்தை முல்லைத்தீவு சம்பவத்துடன் தொடர்பு படுத்துவதற்கான விஷமிகள் யாரும் இதை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed