Sat. Feb 15th, 2025

திருகோணமலையில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 20 வயது இளைஞர் கைது

திருகோணமலை-மொரவெவ பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை பொலிஸார் இன்று (7) காலை கைது செய்துள்ளார்கள். கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, 15 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி ரொட்டவெவ மற்றும் நொச்சிகுளம் பகுதிகளில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ள மொரவெவ பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்