திரிசங்கு நிலையில் ஐக்கிய தேசிய கட்சி
ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாச ஆதரவு 50 MP கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை
ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச ஆதரவு 50 க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் கையெழுத்துக்களை சேகரித்து, கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றக் குழு மற்றும் செயற்குழுவின் கூட்டத்தை கூட்டி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யுமாறு கோரவுள்ளார்கள் என்று அமைச்சர் ஒருவர் கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஒரு தீவிரமான போர் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் பிரேமதாசா, சபாநாயகர் கரு ஜெயசூரியா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்த போட்டியில் உள்ளார்கள்