Fri. Jun 21st, 2024

திரப்பனை விபத்தில் 8 வயது சிறுவன் பலி

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள திரப்பனை ஏதுன்கம வீதியில் வன்னமடுவ பகுதியில் துவிச்சக்கர வண்டியொன்றும், பாரவூர்தியும் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். தந்தையுடன் சைக்கிளில் பிரயாணம் செய்த சிறுவனை பாரஊர்தி மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்பொழுது பாரஊர்தியின் அடிப்பகுதியில் சைக்கிள் அகப்படுள்ளது . இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளஉள்ளார்., அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்